கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 கிரிக்கெட் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

மும்பை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தியது.
இரண்டாவது டி20 போட்டி பரபரப்பான கட்டத்தில் இருந்த நிலையில், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர் மூன்றாவது போட்டியில் மீண்டும் வெற்றியின் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் நான்காவது டி20யில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இப்பொது, ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. மறுபுறம், இங்கிலாந்து அணி ஐந்தாவது டி20 போட்டியில் ஆதரவு வெற்றிபெறுவதில் உள்ளது. மொத்தத்தில் இரு அணிகளுக்கும் இடையே பரபரப்பான ஆட்டத்தை இன்று இரவு பார்க்கலாம்.
இன்று இரவு விளையாடும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள…
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ரின்கு சிங், அக்சர் படேல், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர் தலைமையிலான அணியில் பிலிப் சால்ட், பென் டக்கெட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.