மனைவியுடன் மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுக்கும் வார்னர்.! என்னடா இது

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவியுடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node