காயத்தால் விலகிய திலக் வர்மா...களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர்!

சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, வர்மா குறைந்தது நான்கு வாரங்களுக்கு விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tilak Varma Shreyas Iyer

டெல்லி :இந்திய அணியின் இடது கை இடது பேட்ஸ்மேன் திலக் வர்மா, டெஸ்டிகுலர் டார்ஷன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் இத்தொடரில் அவர் பங்கேற்பது சாத்தியமில்லை. மேலும், ஜனவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரிலும் அவரது பங்கேற்பு சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் அணியின் மிடில் ஆர்டருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திலக் வர்மாவுக்கு பதிலாக மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷ்ரேயஸ், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஏற்கனவே இடம் பிடித்துள்ளார். டி20 அணியில் அவருக்கு இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிய மறு வரவாக அமையும். கடைசியாக 2023 டிசம்பரில் டி20 போட்டியில் விளையாடிய ஷ்ரேயஸ், டி20 அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இப்போது டிலக்கின் காயம் அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2025இல் பஞ்சாப் கிங்ஸை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று 583 ரன்கள் குவித்த ஷ்ரேயஸ் ஐயர், தேர்வாளர்களின் பாரபட்சம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆஸ்திரேலியா தொடரின்போது ஸ்ப்ளீன் காயத்தில் சிக்கிய அவர், பெங்களூரு சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியை வழிநடத்தி வரும் அவர், சில போட்டிகளுக்குப் பிறகு மருத்துவக் குழு இறுதி மதிப்பீடு செய்யும். உலகக்கோப்பைக்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. போட்டிகள் முறையே ராய்ப்பூர் (23), கவுகாத்தி (25), விசாகப்பட்டினம் (28), திருவனந்தபுரம் (31) ஆகிய இடங்களில் நடைபெறும். திலக் வர்மா இத்தொடரில் நிச்சயம் இடம்பெற மாட்டார் என்று உறுதியாகியுள்ளது. பிசிசிஐ விரைவில் அவருக்கு பதிலாக வீரரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டி20 உலகக்கோப்பை 2026ஐ இந்தியா இணைந்து நடத்தவுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை அமெரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.