இன்று மோதுகிறது ஹைதராபாத் VS ராஜஸ்தான்..!

இன்று ஐபிஎல் தொடரின் 26 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில் உள்ளனர்.
அதைபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை இந்த இரண்டு அணிகளும் இதுவரை 11 முறை மோதியதில் 6 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 5 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025