நாளை 2 -வது ஒருநாள் போட்டி ...!பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ் அணி ...!

நாளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்

நாளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

unknown node

அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்தது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்கிய  இந்திய அணி ,கேப்டன் கோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் கோலி  140 ரன்களும் , துணை கேப்டன் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.இந்நிலையில் நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்  இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.அதேபோல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகின்றது.