சதம் அடித்து அசத்திய உஸ்மான் க்வாஜா!!ஒரு நாள் தொடரில் 2-வது சதம்!!

This news gives information about Usman Guwaja's 2nd century

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது.

இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சதம் அடித்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி  டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்  ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில்  1 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் அடித்ததுள்ளது .ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா இந்த போட்டியில் சதம் அடித்தார்.இது இவருக்கு 2-வது சதம் ஆகும்.மேலும் இந்ததொடரிலும் 2-வது சதம் ஆகும். களத்தில் க்வாஜா *100*,பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 46* ரன்களுடன் உள்ளனர்.