கிறிஸ் மோரிஸை பாராட்டி வீரேந்திர சேவாக் ட்வீட்..!!

Former India cricketer Virender Sehwag has tweeted on his Twitter page praising Chris Morris.

கிறிஸ் மோரிஸை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கடைசி நேரத்தில் மிகவும் அருமையாக ராஜஸ்தான் அணியின் ஆல் – ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு வழிவகுத்தார்.

அற்புதமாக விளையாடிய கிறிஸ் மோரிஸை பலர் பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இந்த ட்வீட்டில் கடந்த போட்டியில் கிறிஸ் மோரிஸ்க்கு மரியாதை கிடைக்கவில்லை ஆனால் இந்த போட்டியில் வெகுமதியுடன் மரியாதைகிடைத்துள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.