KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் இதுவரை 34 போட்டிகள் மோதியுள்ள நிலையில், 15 முறை டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது.

KKRvsDC

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல்(வ), கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல்(கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார்

கொல்கத்தா : ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(C), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரோவ்மன் பவல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி மிகவும் சிறப்பான பார்மில் விளையாடி வருகிறது என்று சொல்லலாம். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 9 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 4-வது இடத்தில் உள்ளது. அதே போல, கொல்கத்தா அணி சற்று சுமாராக தான் விளையாடி வருகிறது. 9 போட்டியில் 3 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 7-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பதால் போட்டி சற்று சவாலாக இருக்கும்.

கடைசியாக டெல்லி அணி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றிபெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்