இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன் கால்பந்து வீரர் உயிரிழப்பு.!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன் தேசிய கால்பந்து அணி வீரர் சுலைமான் அல்-உபைத் உயிரிழந்தார்

Suleiman Obeid

பாலஸ்தீனம் :‘பாலஸ்தீனிய பீலே’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஓபெய்த், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். உதவிக்காக சுலைமான் காத்திருந்த நிவாரண முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

41 வயதான அவர் 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்திருந்தார், மேலும் ‘பாலஸ்தீன பீலே’ என்று அழைக்கப்பட்டார். காசாவின் கதாமத் அல்-ஷாதி கிளப்பின் முன்னாள் நட்சத்திர வீரரான சுலைமான் அல்-ஒபெய்ட், பாலஸ்தீன தேசிய அணிக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பாலஸ்தீன கால்பந்து சங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 40 வயதான சுலைமான் அல்-ஒபெய்ட், ‘பாலஸ்தீன பீலே’ என்று அழைக்கப்படும் இவர், பாலஸ்தீனத்தின் தெற்கு காசா பகுதியில் “மனிதாபிமான உதவிக்காகக் காத்திருந்தபோது” இறந்தார், “இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node