நார்வே செஸ்: வெறும் 0.5 புள்ளிகள் வித்தியாசம்., மேக்னஸ் கார்ல்சன் முன்னிலை.! 2-ம் இடத்தில் குகேஷ்..,

ஃபேபியானோவை எதிர்த்து ஒரு பெரிய கிளாசிக்கல் வெற்றிக்குப் பிறகு மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

gukesh - carlsen

 ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிளாசிக்கல் செஸ் வடிவின் 9-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் மீண்டும் முன்னிலையை பெற்று, 13வது நார்வே சதுரங்கப் போட்டியின் கடைசி சுற்றுக்குள் நுழைந்தார்.

மேலும் இதில், 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் வெய் யீயைச் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தனது வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டார். மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்க, இன்னும் ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் குகேஷ் அரை புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார்.

இப்பொது புள்ளி பட்டியலின்படி, ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14.5 இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும், பாபியானோ கருணா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், நார்வே செஸ் மகளிர் பிரிவில், அன்னா முசிச்சுக் மற்றொரு பெரிய கிளாசிக்கல் வெற்றியைப் பெற்று இப்போது 15.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார், ஹம்பியை விட இரண்டு முழு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். லீ டிங்ஜி 13 புள்ளிகளுடன் நெருக்கமாக இருக்கிறார். இன்னும் ஒரு சுற்று மீதமுள்ளது, 10வது சுற்று இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்