அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காயம் காரணமாக விலகினார் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார்.
நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,சுவிசெர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா மோதினார்கள். இதில் முதல் இரு செட்களை வாவ்ரின்கா 6-4க, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
3-வது செட் நடந்து கொண்டிருந்த போது தோள்பட்டை காயத்தால் அவதியடைந்த ஜோகோவிச் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் வாவ்ரின்கா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
June 3, 2025
35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!
June 3, 2025