சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் ” எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம் எனவும் “பாஜகவின் டப்பிங் வாய்சில் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்சில் பேசுகிறார்” எனவும் விமர்சனம் செய்து பேசியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட சுற்றுப்பயணத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஜூலை 10 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தப் பயணத்தை “தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று கூறும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார்” என்று கிண்டலாக விமர்சித்தார். இது குறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ […]
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 […]
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். கோவிலின் முன்னேற்றத்திற்காக பொதுமக்களாகிய நீங்கள் நிதி கொடுத்தால், அதை வைத்து, இவர்கள் சம்பாதிப்பதற்காக கல்லூரிகள் அமைக்கிறார்களாம். ஏன் அரசாங்க நிதியை வைத்து கட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில்கள் நிதியில் கல்வி […]
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7, 2025) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தில், அவர் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக, இன்று மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும், ஜூலை […]
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி, திருப்புவனம் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அதிமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கழக வளர்ச்சி பணிகள் குறித்து […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் காலை, மாலை என நடக்கவுள்ள இக்கூட்டத்தில், இன்று 42 மாவட்டங்களின் நிர்வாகிகள், நாளை 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, 2026 தேர்தல், கூட்டணி, தேர்தல் வியூகம், இளைஞர்களை கட்சியில் இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இந்தக் கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்திருக்கிறது. ஏனென்றால், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் சென்றது பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க தலைவர் […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ”’நானும் டெல்லிக்கு […]
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் மே 24 அன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக்கூட்டத்தில் வெளிப்படுத்தவே வரும் 24ம் தேதி டெல்லி […]
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாகா கமிட்டி என்பது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், விசாரணைகள் மேற்கொள்வதற்கும், தீர்வுகள் காணவும் அமைக்கப்படும் ஒரு குழு ஆகும். இந்த குழுவே பல கல்லூரிகளில் மற்றும் தொழில் நிறுவனங்களில் செயல்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் சென்னை பல் மருத்துவ கல்லூரியில் விசாகா கமிட்டி […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் பல கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து […]
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே திருப்பூர் பல்லடம் அருகே இதே பண்ணை வீட்டில் 3 பேர் கொலை செய்யபட்டதை அடுத்து அதே போன்ற இரட்டை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக 7வது முறையும் ஆட்சியை கைப்பற்றும். இதுவரை திராவிட மாடல் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, 2026 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O-வை காணும்.” என பேசியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கூற்றை விமர்சிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த மிரட்டல் இ-மெயில் மூலம் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்பநாய் குழுவினர் வெடிகுண்டை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். […]
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய நிதி பாதுகாப்பை உறுதி செய்தாலும், அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இதனால், 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System – NPS) அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய […]
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூறினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றே சொன்னோம். நாங்கள் ஏமாற்றி […]