அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை! அச்சத்தில் மக்கள்!

அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் இதுவரை 5,790,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 357,432 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை, 1,745,803 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 102,107 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,503 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025