ஓய்வின்றி ஒரே கட்டமாக சிம்புவின் ‘மாநாடு’! வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்!

வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாததால் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே இருந்தது என கூறப்பட்டது. அதனால், ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப் என கூறப்பட்டது.
அடுத்ததாக நாயகன் சிம்புவின் தாயார் சிம்பு சூட்டிங்கிற்கு கண்டிப்பாக வருவார் என உறுதி அளித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. சிம்பு தற்போது ஐயப்பன் கோவில் செல்ல மாலை போட்டு உள்ளதால் அவர் சபரிமலை சென்று வந்தவுடன் சூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்பட்டது.
ஆதலால், ஜனவரி மாதம் நான்காவது வாரத்தில் மாநாடு சூட்டிங் ஆரம்பிக்கும் எனவும், மேலும், இந்த சூட்டிங் ஒரே கட்டமாக மார்ச் இறுதி வரை நடத்தி படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒருவேளை இரண்டு கட்டமாக எடுத்தால் மீண்டும் சிம்பு ஷூட்டிங் வராமல் மீண்டும் படம் தாமதமாகி விடுமோ என்ற தயக்கத்தில் வெங்கட் பிரபு இப்படி ஒருபிளான் போட்டு இயக்க உள்ளார் என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025