தல அஜித் காதில் கூறிய ரகசியம் இதுதான்! காமெடி நடிகரின் நெகிழ்ச்சி சம்பவம்!

- தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை பட ஷூட்டிங்கில் உள்ளார்.
- அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தை தற்போதைய காமெடி நடிகர் சிங்கம் புலி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தல அஜித் வலம் வருகிறார். அவர் தற்போது தனது 60வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.
தல அஜித் நடித்த ரெட் படத்தினை நடிகர் சிங்கம் புலி இயக்கி இருந்தார். அதுதான் அவரது இயக்கத்தில் முதல் படம். இயக்குனர் நடிகர் சிங்கம் புலி அண்மையில் ஒரு பேட்டியில், அஜித், சுந்தர்.சி இயக்கத்தில் உருவான உன்னை தேடி படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது, உன்னை தேடி படத்தின் திரைக்கதையில் சிங்கம் புலி வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது அஜித்திற்கு இந்த படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. அதனை சிங்கம் புலியிடம் கூறியுள்ளார் அஜித். உடனே, சிங்கம் புலி, கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என நம்பிக்கை அளித்துள்ளார். உன்னை தேடி படம் வெற்றிபெற்று படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது. அப்போது, அந்த விழாவில் அஜித், சிங்கம் புலி காதோரம் நீங்கள் நிக் ஆர்ட்ஸ் பட நிறுவனத்திற்கு செல்லுங்கள். நாம் அடுத்தபடம் செய்கிறோம் என கூறியுள்ளார். அதன் பிறகு தான் ரெட் படத்தை இயக்கும் வாய்ப்பு சிங்கம் புலிக்கு கிடைத்துள்ளது. இதனை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் இயக்குனர் சிங்கம் புலி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025