பிரேசில் பள்ளியில் துப்பாக்கி சூடு10 பேர் பலி:20 பேர் படுகாயங்கள் !!!

This news gives information about 10 killed in Brazil school: 20 wounded-brazilil pallil thupaki sudu 10 per pali 20 per padukayam

துப்பாக்கி சூடு நடத்திய  இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் பள்ளி கூடத்தில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் உள்ள பள்ளி கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 20 பேர் படுகாயங்கள் அடைந்தனர்,படுகாயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பள்ளி ஊழியர்கள் 2 பேர்பள்ளி அருகிலுள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் ஆகியோர்  பலியாகினர்.

இதன்பின் துப்பாக்கி சூடு நடத்திய  இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக சாவோ பாவ்லோ மாநில ஆளுநர் ஜோவாவோ டோரியா தெரிவித்துள்ளார்.

மேலும்  கடந்த 2011ம் ஆண்டில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் பள்ளி கூடத்தில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்பின் பள்ளி கூடத்தில் நடந்த  துப்பாக்கி சூடு சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் பள்ளியில் துப்பாக்கி சூடு10 பேர் பலி:20 பேர் படுகாயங்கள் !!!