பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர்!!!!

11 terrorists were killed in the attack on terrorists

தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். இந்த சண்டையில் பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் அதிகமாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் போலீசாரை தொடர் தாக்குதல் நடத்தி  வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அப்போது  இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். இந்த சண்டையில் பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.