ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பயங்கரவாதிகள் பலி !!! 7 பாதுகாப்பு படைவீரர்கள் வீரமரணம்!!!!

This news gives information about 8 terrorists killed in Afghanistan 7 security personnel are martyrs afganithanil nadathiya thakuthalil

குவாலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை  நடத்தினர்.

தலீபான் பயங்கரவாதிகள் முதலில் ராக்கெட் குண்டுகள்  வீசி எறிந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள குந்துஸ் மாகாணம்  குவாலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை  நடத்தினர்.

தலீபான் பயங்கரவாதிகள் முதலில் ராக்கெட் குண்டுகள்  வீசி எறிந்தனர். பின்பு அவர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த பாதுகாப்பு படைவீரர்கள்  அந்த பகுதியை முழுவதும் சுற்றிவளைத்தனர்.

அதன் பின்பு பாதுகாப்பு படைவீரர்களுக்கும் , பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டை இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பயங்கரவாதிகள்  தாக்கியதில்  7 பாதுகாப்பு படைவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மேலும் 8 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம் அடைந்தனர்.