சீனாவில் சைக்கிள் மோதி கார் சேதமடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சைக்கிளை விட எடை அதிகமானது கார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதே சமயத்தில் விபத்து ஏற்பட்டால் அதிகம் பாதிப்படைவது சைக்கிள் தான். ஆனால் சீனாவில் மட்டும் இதற்கு நேர்மாறாக ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. சீனாவில் வேகமாக வந்த காரும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அதில் காருக்கு தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சைக்கிளோ எந்த சேதமும் இல்லாமல் ஜம்முன்னு நின்று கொண்டிருக்கிறது.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.