இந்தியா,ஆஸ்திரேலியா போட்டியின் போது ஓவல் மைதானத்தில் கலை கட்டிய சுண்டல் , பொரி விற்பனை!வைரலாகும் வீடியோ

நம் நாட்டில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் சுண்டல் ,பொரி  வைத்து விற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அதிலும் அதிகமாக பேருந்து நிலையத்தில் , கடற் கரையில் ,

நம் நாட்டில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் சுண்டல் ,பொரி  வைத்து விற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அதிலும் அதிகமாக பேருந்து நிலையத்தில் , கடற் கரையில் , தியேட்டரில் சுண்டல் , பொரி விற்பனை அதிகமாக இருக்கும்.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கும் ,ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியது.இப்போட்டியை காண அதிகமான இந்திய அணி ரசிகர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் குவித்தனர்.இதை அறிந்து கொண்ட பிரிட்டன்காரர்  ஒருவர் ஓவல் மைதானத்தின் வாசலில் வைத்து சுண்டல் , பொரி கடையை விரித்து விற்பனை செய்தார்.அங்கு வந்த ரசிகர்களிடம் அவர் விற்ற சுண்டல் , பொரி  நல்ல வரவேற்பு கிடைத்ததன் அந்த பிரிட்டன்காரர் வைத்த கடையில் விற்பனை கலை காட்டியது.மேலும் பிரிட்டன்காரர்  சுண்டல் , பொரி விற்பனை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

unknown node
இந்தியா,ஆஸ்திரேலியா போட்டியின் போது ஓவல் மைதானத்தில் கலை கட்டிய சுண்டல் , பொரி விற்பனை!வைரலாகும் வீடியோ