சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி ?

This article gives information about how to make delicious chicken - suvaiyaana chicken vadai cheyvathu eppadi

சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி ?

நாம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அதிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு சிக்கன். இந்த சிக்கனை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம்.

தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

கோழி – கால் கிலோ

முட்டை – ஒன்று

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 6

இஞ்சி – ஒரு அங்குலம்

பூண்டு – 10 பல்

தேங்காய் பூ – 1 கப்

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி (நறுக்கியது)

எண்ணெய் – கால் கப்

உப்பு – ஒரு தேக்கரண்டி

கறி மசாலா – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியையும், பூண்டையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

unknown node

அதன்பன் மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

unknown node

இதனையடுத்து, இந்த கலவையுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போட வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் நறுக்கின கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதையும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல தட்டி எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும். அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் வடை தயார்.