சத்தான தேங்காய் பால் சால்னா செய்வது எப்படி

This article gives information about How to make nutritious coconut milk salna-sathana thenkai paal salna seivathu eppadi

தேங்காய்ப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

சத்தான தேங்காய் பால் சால்னா செய்வது எப்படி?

சத்தான தேங்காய்ப்பால் சால்னா எப்படி செய்வது என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4

எண்ணெய் –2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தக்காளி – 2 (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

கறிவேபில்லை – சிறிதளவு

செய்முறை:

unknown node

முதலில் தேங்காயை உடைத்து துருவி அரைத்து முதல் பால் 1 டம்ளர், இரண்டாம் பால் 2 டம்ளர் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.  அதற்கு பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போடவேண்டும்.

கடுகு நன்கு வெடித்தவுடன்  கறிவேபில்லை,வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன் இரண்டாம் பால், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் முதல் பால் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து இறங்கி விட வேண்டும்.இப்போது சூடான தேங்காய்பால் சால்னா ரெடி.

சத்தான தேங்காய் பால் சால்னா செய்வது எப்படி