அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது!!!!

This news gives information about Huawei company has sued the US government america arsu methu huawei niruvanam valakku thodarnthathu

கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி  ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும்  நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார்.

சீனாவை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய்.இந்த நிறுவனம் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன.

மேலும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி  ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும்  நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா மெங்வான்ஜவ்-வை  தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் தொலை தொடர்பு மூலம் சீனாவுக்காக உளவு பார்க்கிறது என குற்றம் சாட்டிய ஜனாதிபதி டிரம்ப் அரசு.அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்த  அமெரிக்க அரசு மீது டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது!!!!