எட்டு நாடுகள் மோதும் ஜூனியர் ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

எட்டு நாடுகள் மோதும் ஜூனியர் ஹாக்கி  தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது.

எட்டு நாடுகள் மோதும் ஜூனியர் ஹாக்கி  தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் எட்டு நாடுகள் பங்கேற்று மோதி விளையாடுகின்ற 21வயதுக்குட்பட்டோர்க்கான ஜூனியர் ஹாக்கி தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி  ஆரம்பிக்கிறது.

இதில் இந்தியா ,பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.

இதில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.கேப்டனாக மந்தீப் மோர் வும், துணைக் கேப்டனாக சுமன் பெக்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஜூனியர் அணி விவரம்:

மந்தீப் மோர், பிரதாப் லக்ரா, சஞ்சய், அக்‌ஷ்தீப் சிங் ஜூனியர், சுமன் பெக், பரம்ப்ரீத் சிங் போன்றோர் பின்கள ஆட்டக்காரர்களாக (Defenders) அறிவிக்கப்பட்டுள்ளனர்.யாஷ்தீப் சிவாச், விஷ்னு காந்த் சிங், ரபிசந்த்ரா சிங் மொய்ரங்தெம், மணிந்தர் சிங், விஷால் அன்டில் போன்றோர்  நடுகள வீரர்கள் (Midfielders) அறிவிக்கப்பட்டுள்ளனர்.அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்பர், ஷிபம் ஆனந்த், சுதீப் சிர்மாகோ, பிரப்ஜோத் சிங் ஆகியோர் முன்கள வீரர்களாக (Forwards) அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோல் கீப்பர்களாக பிரசாந்த் குமார் சவுகான் மற்றும் பவன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.