தனியார் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஓவியா இவரின் படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில் 90ml படத்தின் டிரைலர் வெளியாகியது.இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.மேலும் 18 வயதை கடந்தவர்கள் மட்டும் பார்க்கும் ஒரு படு அடல்ட் படமாக இயக்குனர் அனிதா உதீப் எடுத்திருக்கிறார்.படத்திற்கு சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் அதிகமாக பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குளிர் படத்திற்கு பிறகு எனக்கு இது தான் இரண்டாவது படம். 90ml ஒரு அடல்ட் படம் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்க்காதீர்கள் என சொல்லிவிட்டோம்.
இதில் சர்ச்சையாக சொல்லப்பட்ட பெண்கள் இரட்டை அர்த்த வசனம் அப்படி பேசினால் என்ன தப்பு? பெண்களுக்கும் ஆசை இருக்கிறது. யாருக்கும் அவர்கள் பயப்படாமல் வெளிப்படையாக தங்கள் மனதில் இருப்பதை பேசவும் அதை செய்யவும் சொல்கின்ற படம் தான் இது.மிகவும் நேர்மையாகவே படத்தை எடுத்திருக்கிறேன்.மேலும் படத்தை முழுவதுமாக பாருங்கள்.
அதற்கு பின்பு தான் இது புரியும். இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. தவறான எந்த விஷயமும் படத்தில் கிடையது.சமூகத்திற்கு தேவையான விஷயங்களும் இருக்கிறது.இங்கு கருத்து சொன்னால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் படம் ஜாலியாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.