தபால் வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை!

தி.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலை வகித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பு மற்றும் தீவிரத்துடன் காணப்படுகிறது.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், பல தொகுதிகளில் ஆரம்ப முன்னிலைகள் தெரியத் தொடங்கியுள்ளன. சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 7 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 11 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பெரம்பூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க தலைவர் விஜய் 507 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். அங்கு திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவுகள் வெளியானவுடன் அரசியல் களம் மேலும் பரபரப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தபால் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அடுத்ததாக

மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அமைதியாகவும், பொறுமையுடனும் முடிவுகளுக்காகக் காத்திருக்குமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முழு முடிவுகளும் இன்று மாலைக்குள் தெரிய வரும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தபால் வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை!