இட்லிப் நகரின் ஒரு சிறையில் செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர்.
சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 2011-ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லிப் மாகாணத்தின் வடமேற்கில் பல இடங்களில் ரஷ்ய விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை நுண்ணாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மனிதஉரிமை நுண்ணாய்வுக் குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் ஏஎப்பியிடம் கூறுகையில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய போர் விமானம் ஒன்று பல்வேறு பகுதிகளில் பல தாக்குதல்களை நடத்தியது.
இதில் இட்லிப் நகரமும் சாராகியூப் நகரும் அடக்கம்.கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கிய அதிபர் ரீசெப் தாயீப் எர்டோகன் ஆகியோரால் ஒரு சமாதான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலமாக அந்த உடன்படிக்கையை மீறியுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி சிரியாவின் மீது செலுத்தி வரும் தங்கள் ஆயுத மோதல் போக்கிலிருந்து துருக்கியும் ரஷ்யாவும் நிறுத்தி கொண்டது.ஆனால் மீண்டும் சிரியா மீது கனரக ஆயுதத் தாக்குதலில் இந்நாடுகள் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
இட்லிப் நகரின் புறநகர் பகுதியில் ஒரு சிறையில் செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர் என அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இட்லிப் பகுதி ஹயாத் தாஹ்ரீர் அல் ஷாம் இயக்கத்தைச் சேர்ந்த ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வான்வழித் தாக்குதலில் 600 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
மேலும் சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 2011-ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.