"அன்புத்தம்பி பேரறிவாளன் சிறைவிடுப்பை முதல்வர் நீட்டிக்க வேண்டும்" – சீமான் கோரிக்கை..!

Seeman, the chief coordinator of the Naam Tamilar Katchi, has urged the Tamil Nadu government to extend Perarivalan prison leave.

பேரறிவாளன் சிறை விடுப்பை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது  தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதன்படி கடந்த மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் சென்றார். சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் முடிந்தும், மீண்டும் நீட்டிக்கப்பட்டு, சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,பேரறிவாளனின் பரோல் நாளை முடிவடைய உள்ளதால்,அவரின் சிறை விடுப்பை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாளையோடு சிறைவிடுப்பு நிறைவடைகிற செய்தியறிந்தேன்.தம்பியின் உடல்நலனையும், மருத்துவச்சிகிச்சையையும் கருத்தில்கொண்டு அவரது சிறைவிடுப்பை நீட்டிக்கவேண்டுமென தமிழக முதல்வரிடம்கேட்டுக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node