தாய்லாந்தில் பொது தேர்தல் நடத்த மன்னர் உத்தரவு...!!

தாய்லாந்து நாட்டில் பொது தேர்தலை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு மன்னர் அறிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் பொது தேர்தலை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு மன்னர் அறிவித்துள்ளார்.

தாய்லாந்தில் நாட்டில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருந்த பொது தேர்தலை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி அந்நாட்டு மன்னர் மகா வஸ்ரகான் ஆணை பிறப்பித்துள்ளார் . தாய்லாந்து நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது.இதையடுத்து அந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பொது தேர்தல் நடத்தபடவில்லை .

இந்நிலையில் நடக்காமல் இரத்தான பொது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்று தாய்லாந்து நாட்டு மன்னர் ஆணை பிறப்பித்துள்ளார். அந்நாட்டில் மன்னரின் இந்த ஆணை அந்நாட்டின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சட்டப்படி மன்னரின் உத்தரவு வெளியிடப்பட்டால் அடுத்த 5 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் .இந்நிலையில் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் 5 நாட்களுக்குள் எடுக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக பிப்ரவரி 24ஆம் தேதி பொதுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது , ஆனால்  அதற்கான நடைமுறை தொடங்கப்படாததால் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் தொடர்ந்தநிலையில் மன்னர் இந்த தேர்தல் உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகின்றது.

தாய்லாந்தில் பொது தேர்தல் நடத்த மன்னர் உத்தரவு...!!