சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க கூறிய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா. !!!!

The United Nations has dismissed the request of terrorist Hafiz Saeed, who has been removed from the list of international terrorists.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் 10 பேர் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக புகுந்த  பயங்கரவாதிகள் 10 பேர் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

மேலும் இந்த தாக்குதலை குறித்து  உலக நாடுகள் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை வன்மையாக கண்டித்தன.

இந்நிலையில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டான்.அவன் தற்போது  பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறான்.

இந்நிலையில் ஹபீஸ் சயீத் தரப்பில் தன்னை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை லாகூர் சட்ட நிறுவனம் தரப்பில் மூலம்  ஐ.நா.வை நாடினான்.

ஹபீஸ் சயீத் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்தது.பயங்கரவாதம் விவகாரத்தில் ஹபீஸ் சயீத்  தொடர்பான ஆவணங்களை இந்தியா தாக்கல் செய்ததால் ஐ.நா. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.