எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதிலளிக்கக்கூடிய டிடிவி தினகரன் பெறும் பரப்பை ஏற்படுத்தியுள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திவாரகன் ஒரு வேளை வீடியோ வெளியான அதிர்ச்சியில் கூட டிடிவி இருக்கலாம் என்று விமர்சித்தார். மேலும் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தலால் தான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக திவாகரன் கூறியுள்ளார்.