சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

KaruppuTeaser

சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின் 45வது படமான ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார், இப்படத்தின் டீஸர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது, இந்த படம் சூர்யாவின் வேல் , சிங்கம் மற்றும் எதிர்க்கும் துணிந்தவன் போன்ற பிற படங்களைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது . இந்தப் படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, விக்ரம் மோர், அருண் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர், மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்து புகழ் பெற்ற அனகா மாயா ரவி, தமிழில் அறிமுகமாகிறார்.

படக்குழுவில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு இயக்குநராகவும், ஆர்.கலைவாணன் படத்தொகுப்பாளராகவும், அருண் வெஞ்சாரமூடு தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அன்பரிவ் மற்றும் விக்ரம் மோர் சண்டைக் காட்சிகளைக் கையாளுகின்றனர்.

சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். விஷ்ணு எடவன், அசல் கோலார் மற்றும் அருண் ஸ்ரீனிவாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்