சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது அவ்வபோது வெளியாகும்ஒரு வதந்தியாக இருந்தாலும், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் TNCA-க்கு மெயில் வந்ததை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே போல டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் […]
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. இராணுவ விதிகள் 1948 இன் விதி 33 இன் கீழ், எடுக்கப்பட்ட இந்த முடிவு, வழக்கமான இராணுவத்தை கூடுதலாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, இராணுவத் தளபதி இப்போது அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க அல்லது வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபுரிய அழைக்கலாம். மேலும், நாட்டில் […]
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது, இப்படி எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது, மோதல்கள் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலில், ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீர […]
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசும் தொடர்ந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் , இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. இங்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பொதுவெளியில் பாதுகாப்பு […]
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுத்தி […]
சென்னை : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பு கருதி காலவரையின்றி மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள வெளிமாநில […]
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி தாக்குதலை முறியடித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து நேற்று புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக அமெரிக்கவை சேர்ந்தவர் போப்-ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீவோஸ்ட் புதிய போப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் […]
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேசத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் போலீசார் […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் எல்லை பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, […]
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் சூழலில், டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இதில் குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் F16 […]
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் […]
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை. ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் […]
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங், மே 7/8 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் தாக்குதலை, இந்திய பாதுகாப்பு அமைப்பால் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பது குறித்து இன்று பத்திரிகைகள் முன் உரையாற்றினர். இது தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், ”’ எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள் மற்றும் […]
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, அனைத்து OTT தளங்களிலும் பாகிஸ்தான் தொடர்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெட்ஃபிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வீடியோ வரை அனைத்து தளங்களும் பாகிஸ்தானின் படங்கள், வெப் சீரியல்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று மத்திய […]
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், ”மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 9 முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆயுதப்படை எடுத்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ கற்பனையிலும் […]
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரேடார் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் […]
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (POJK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. 15 நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை இந்தியா முறியடித்துள்ளது. மேலும், இந்தியாவின் […]