ஆந்திர பிரதேசம் : மது பிரியர்களுக்கு குறைவான விலையில் மதுவை அளிக்கும் பொருட்டு ஆந்திர மாநில அரசு ‘புதிய மதுபான கொள்கை’-யை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.99யில் இருந்தே 180 மில்லி மதுபானம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஆந்திர மாநில அமைச்சர் கே.பார்த்தசாரதி கூறுகையில், மாநில முதலமைச்சர் சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவை புதிய மதுபான கொள்கைக்கு கையெழுத்திட்டுள்ளது. திருப்பதியை தவிர்த்து 12 மாவட்டங்களில் 3,736 சில்லறை மதுபான கடைகள் தனியார் விற்பனைக்கு […]
புனே : புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) என்ற நிறுவனத்தில் 26 வயது உடைய அன்னா செபாஸ்டியன் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது அந்நிறுவனத்தில் ஏற்பட்ட பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக பட்டய கணக்காளராக (Chartered Accountant) EY நிறுவனத்தில் அன்னா பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம் மூலம் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக தற்போது அவர் உயிரிழந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து, […]
டெல்லி : மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது . இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சில மாதங்களுக்கு […]
சென்னை : ஹரியானா மாநிலத்தை தொட்ர்ந்து கேரளாவின் மலப்புரத்தில் 38 வயதான நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு west African clade-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் […]
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 21.09.2024) அதாவது சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… கோவை காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் […]
சென்னை : மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்ததற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என திமுக உட்பட பல்வேறு கட்சியினர் […]
செய்ப்பூர் : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தின், பாண்டிகுய் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, அருகில் இருந்த 35 அடி மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் மீட்புப்படையினரை வரவைத்து மீட்பு பணியை துரித படுத்தினர். ஆனால், மழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் கடந்த 18 மணி நேரமாக ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் முயற்சி […]
பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக அறிவிக்க கோரி திமுகவினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக மூத்த நிர்வாகிகளே இந்த கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் துணை முதல்வர் கோரிக்கையை முதலமைச்சர் முன்னிலையிலேயே முன்வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக இருந்த இந்த துணை முதல்வர் விவகாரம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று திமுக தலைவரும் தமிழக […]
டெல்லி : விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. சந்திரயான் 3-ஐ தொடர்ந்து, இஸ்ரோ நிலவில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மேற்கொள்ள சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிரூபிப்பதற்காகவும் சந்திரயான்-4 என பெயரிடப்பட்ட இரண்டு முக்கிய விண்வெளிப் பயணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு […]
டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடத்தத் தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக்குழுவினர் […]
சென்னை : நேற்று தந்தை பெரியார் பிறந்த தினத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் கூற்றுகளை நினைவுகூர்ந்து தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார். இந்த வாழ்த்துப் பதிவை அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் , சென்னை பெரியார் திடலுக்கு வந்த அக்கட்சி தலைவர் விஜய் , அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் […]
சென்னை : பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தான், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார். அப்போது […]
சென்னை : இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா என மூத்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் எந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும், அமைச்சரவை மாற்றம் குறித்தும், குறிப்பாக திமுகவினர் மத்தியில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11. 11 சதவீத வாக்குகள் பதிவானது. இதை தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும், தற்பொழுது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகப்டசமாக, கிஷ்த்வாரில் 56.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 29.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. Jammu and Kashmir 1st […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 20.09.2024) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… சென்னை தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூர் கிராமம் அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர். […]
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க […]
புதுக்கோட்டை : சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘விஜய், மக்கள் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்ததை எப்படி பார்க்கிறிர்கள்?’ என சீமானிடம் கேள்வி […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் (காலை 11 மணி நிலவரப்படி) 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் […]