செய்திகள்

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 2, 2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்ட ரோகித், தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் இன்று […]

#Child 3 Min Read
Child - Kidnapping

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டாபர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் டாபரின் தயாரிப்பை அவதூறாக சித்தரித்ததாகவும், அவற்றில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும், பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும் ஒப்பீடு செய்து மக்களை தவறாக […]

AdBan 4 Min Read
Patanjali - Delhi High Court

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக, எந்தவொரு வங்கியின் சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம். இந்த இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம் விதிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது. PNB சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், எந்த அபராதமும் விதிக்கப்படாது. ஆம், […]

bank 3 Min Read
Punjab National Bank

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் இடைவெளியுடன் நடைபெறும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை இன்றைய செய்தியாளர் சாந்திப்பின்போது, கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். மேலும், கூட்டத்தொடரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் […]

all party meeting 4 Min Read
monsoon parliament session

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 06-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, […]

#IMD 4 Min Read
rain news tamil

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர். இதில், மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி(38), ராமஜெயம் (27), வைரமணி(32) மற்றும் லட்சுமி […]

#Sivakasi 7 Min Read
edappadi palanisamy

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக, அஜித் குமாரை காவலர்கள் தாக்கியதை கோவில் பணியாளர் சத்தீஸ்வரன் வீடியோவாக பதிவு செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். இந்த வீடியோ, காவலர்கள் அஜித் குமாரை பத்திரகாளியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மாட்டுத் […]

Ajith Kumar 6 Min Read
ajith kumar lockup death

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று ஜூலை 2, 2025 அன்று திட்டவட்டமாக தெரிவித்தார். “கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முழு அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகத் தொடர்ந்து பணியாற்றுவார்,” என்று ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அன்புமணி, […]

#PMK 4 Min Read
ramadas arun and anbumani

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற […]

#US 6 Min Read
US FINE google

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி, வரி ஏய்ப்பு மற்றும் போலி பான் கார்டு பயன்பாட்டைத் தடுக்கவும், நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, […]

aadhaar 4 Min Read
aadhar card pan apply

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மசோதா, Medicaid எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது எனவும் ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா எச்சரித்ததாவது, இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ […]

Barack Obama 7 Min Read
donald trump obama

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக […]

Ajith Kumar 5 Min Read
ajith kumar lock up death

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறையின் செயல்பாடு மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். […]

Ajith Kumar 6 Min Read
tvk vijay

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர், முக்கியமான சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அமர்வாக இருக்கும். பொதுவாக, மழைக்கால கூட்டத்தொடர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் […]

Ministry 5 Min Read
Monsoon Session of Parliament

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு  சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் […]

Ajith Kumar 3 Min Read
TVK vijay - ajith kumar familey

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று (ஜூலை 2) உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணமாக அறிவித்துள்ளார். விபத்து […]

ISSUE 5 Min Read
TNPolice -virudhunagar

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி, ‘காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். […]

#IPS 5 Min Read
adgp davidsondevasirvatham

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. மேலும், […]

#TNPSC 2 Min Read
tnpsc exam hall ticket 2024

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது, ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, அவர் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் உள்ளிட்ட மூவரிடம் நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் […]

Ajith Kumar 3 Min Read
Nikita - ajith kumar

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட். இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் […]

#China 4 Min Read
US - india -China