சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம் குறையாமல் இருக்கிறது. இந்த போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் மற்றும் டிரம்பின் […]
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவை உலுக்கிய துயர சம்பவமாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், தனது மனைவியின் சாம்பலை கரைப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். இவரது மறைவால், லண்டனில் 4 மற்றும் 8 வயதுடைய அவரது இரு குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உருக்கமான அறிவிப்பு […]
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும் கோண்டாப் (Khondab) நகரங்களில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது. “அராக் மற்றும் கோண்டாப் நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குடிமக்கள், உங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில், […]
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 241 பயணிகள் உட்பட 279 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன், “விபத்து […]
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே, இரண்டு I-கிர்டர்கள் (ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை) திடீரென இடிந்து விழுந்தன.இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி […]
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tehran University of Medical Sciences) மருத்துவ மாணவர்கள் விடுதி இலக்காகி, அதில் தங்கியிருந்த ஐந்து இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதலின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத […]
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல், அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, வாக்காளர்களுக்கு சேவைகளை எளிமையாக்கவும், தாமதங்களை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிமுறைகளின் கீழ், விண்ணப்பங்கள் ஆன்லைனில் (https://voters.eci.gov.in/ அல்லது […]
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கில், தமிழகத்தில் சென்னை, கோவை, மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நான்கு பேரை கைது செய்தது. இந்த வழக்கு, 2022 அக்டோபர் 23 அன்று கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் […]
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து,நேற்று (18-06-2025) காலை 05.30 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும். அதே சமயம், தமிழகத்தில் இன்று 4 […]
ஈரான் : ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் சிலர் காயமடைந்ததை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியது. தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆம், டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இஸ்ரேல் தாக்குதலில் 5 இந்திய […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 6வது நாள் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 வீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (AITUC) அறிவித்துள்ளது. தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் பங்கேற்கின்றனர். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, “கீழடி ஆய்வு முடிவுகள் பாஜகவின் புராணக் கதைகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் தொகுக்கப்பட்டவை” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் […]
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய […]
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை தாக்கும் என அஞ்சப்படுவதால், போர் இன்னும் தீவிரமடையும் நிலையில், மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். ஈரானில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்கும் நிலையில் கமேனி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ஈரான் உடனடியாக சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையில் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா காமேனி பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய தினம், […]
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இதில் முக்கியமானவை சாகித்ய அகாடமி விருது, பால சாகித்ய புரஸ்கார் (குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது), மற்றும் யுவ புரஸ்கார் (இளம் எழுத்தாளர்களுக்கான விருது) ஆகியவை அடங்கும். 2025 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அவரது சிறார் நாவலான ‘ஒற்றைச் சிறகு […]
சென்னை : சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்று விமானங்களைத் தேர்வு […]
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ், விமான விபத்தில் உயிரிழந்த தன் சகோதரர் அஜய்யின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் இன்னும் முழுதும் குணமாகாத நிலையில், குஜராத் அருகேயுள்ள டியு தீவில் நடந்த தனது சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் […]
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டண பாஸ் வழங்கும் நடைமுறை ஆகஸ்ட் 15இல் தொடக்கம், ரூ.3,000க்கு பாஸ் பெற்றால் ஓராண்டுக்கோ அல்லது 200 பயணங்களோ சுங்கக் கட்டணம் தனியாக செலுத்தாமல் பயணிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் […]