அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்படுத்த சில நிமிடங்களில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 241 பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து, மீட்புப் பணிகளின்போது 70 தோலா (சுமார் 700 கிராம்) […]
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் தேவை. நிதானமாக யோசித்து, சரியான முடிவு எடுப்போம்,” என்று அவர் கூறினார். செய்தியாளர்கள் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்விகளை கேட்டு வருவதால் பிரேமலதா இன்று சற்று கோபம் அடைந்தார். கோபத்துடன் பேசிய […]
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான்) ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உள்ளதாகவும், ஈரான் மத்திய கிழக்கில் பிராந்திய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக […]
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக் டாக்ஸி சவாரிகளை வழங்குவதில் ஒரு காலத்தில் பிரபலமான ரேபிடோ, பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான கவலைகள் காரணமாக ஒழுங்குமுறை விமர்சனத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து, பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் பைக் டாக்ஸிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் (ஜூன் 16) முடிவுக்கு வந்தது. இந்நிலையில், Uber நிறுவனம் ‘Moto’ என்ற பைக் டாக்ஸி சேவையை ‘Moto […]
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரி பொன்னரசி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, ராஜாவும் அவரது மனைவி அனுஷாவும், பொன்னரசியை அவர்களது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 16% பங்குகளை ஒதுக்குவதாக உறுதியளித்து முதலீடு செய்ய வைத்தனர். ஆனால், […]
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் […]
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ”ஆளுநர் விருதுகள்” 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் ஆளுநர் விருதுகள்-2025′ க்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பிரிவுகளிலும் தலா 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். சமூக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தொண்டு நிறுவனத்துக்கு ரூ.5 […]
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதிய பின்னர் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர், அவர்களில் 241 பேர் இறந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் விடுதியின் சுவரில் மோதியதால் மாணவர்கள் சிலரும் இந்த விபத்தில் பலியாகினர். ஏர் […]
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிகிறது. தற்பொழுது, தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. அவர் 4 நாட்களுக்கு முன்புதான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆம்.., இஸ்ரேல் ராணுவம், ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், […]
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்பொழுது, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தி இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறது. அதன்படி, ஜெகன் மூர்த்தியிடம் டிஎஸ்பி தமிழரசி, ஜெயராமிடம் டிஎஸ்பி புகழேந்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாலங்காடு காவல் நிலையத்தின் தனித்தனி அறைகளில் இருவரிடமும் […]
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக வேகம் அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கண்டைனர் லாரி விழுந்ததில் கண்டனர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள பெண்களைமீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. விபத்து நிகழ்ந்தவுடன், உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியின் […]
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 3டி வீடியோ வெளியீட்டை கடுமையாக விமர்சித்தார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக “கற்பனைக் காட்சிகளை” (3D வீடியோ) மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோவைக் […]
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இந்த அகழாய்வு, தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை உலகறியச் செய்து, சங்க காலத்தின் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) வாழ்க்கை முறை, நகர நாகரிகம், எழுத்து, தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை (2014-2016) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா […]
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டம் 2018இல் முறையாக ஒப்புதல் பெற்று, 2019 ஜனவரி 27 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றது, இதில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த மருத்துவமனை […]
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப் பறக்க இருந்தது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் இரண்டாவது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது இதுவாகும். தகவலின்படி, ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் AI-159 அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட இருந்தது. […]
கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ஐந்து வாலிபர்கள் மூதாட்டியை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டி, தனது மகன் ஷங்கருடன் வசித்து வந்த நிலையில், மாலையில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. […]
கர்நாடகா : தக்லைஃப் திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று கொண்டு வருகிறது. இருப்பினும், திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கன்னட தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் […]
சென்னை : மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் (ஜூன் 27, 2025) தொடங்கி வைக்க உள்ளார். இந்த முயற்சி, சென்னையை மாசு இல்லாத, பசுமையான நகரமாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். மாநகர போக்குவரத்து கழகம் (MTC) மூலம் இயக்கப்படவுள்ள இந்த பேட்டரி பேருந்துகள், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக செயல்திறனுடன், பயணிகளுக்கு சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும். […]
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, கடந்த மே மாதம் 15ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்தக் காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனுஷின் 16 வயது சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் […]