கடனில் விழுந்த வனிதா…”தயவுசெஞ்சி சப்போர்ட் பண்ணுங்க”…வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!

இந்தப் படத்திற்காக நான் கடன் வாங்கி, எனது முழு உழைப்பையும் செலவு செய்தேன் என நடிகை வனிதா வேதனையுடன் பேசியுள்ளார்.

vanitha vijayakumar

சென்னை : நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வனிதா விஜயகுமார், தனது சமீபத்திய திரைப்படமான Mrs & Mr திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், கடுமையான பண நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்தப் படம், வனிதாவின் இயக்கத்தில், அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்தது. ஆனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் தோல்வியடைந்ததால், வனிதா தனது பொருளாதார நிலையை மீட்டெடுக்க புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

நேரலை ஒளிபரப்பில் உருக்கமாகப் பேசிய வனிதா, “இந்தப் படத்திற்காக நான் கடன் வாங்கி, எனது முழு உழைப்பையும் செலவு செய்தேன். எனக்கு வேறு பெரிய வருமான வழி இல்லை, யாரும் ஆதரவாக இல்லை. என் மகள் ஜோவிகாவும் இப்போதுதான் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் ஓடவில்லை, ஓடிடி தளங்களும் வாங்கவில்லை,” என்று கண்ணீர் மல்க கூறினார்.

வனிதாவின் புதிய முடிவாக, Mrs & Mr திரைப்படத்தை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18, 2025) தனது யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக வெளியிட உள்ளார். ஆனால், இந்தப் படத்தைப் பார்க்க, அவரது யூடியூப் சேனலில் உறுப்பினராக (மெம்பர்ஷிப்) பதிவு செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார். “இந்தப் படத்தைப் பார்க்க, என் யூடியூப் சேனலில் மெம்பராகுங்கள். தயவு செய்து எனக்கு இந்த ஆதரவை அளியுங்கள்,” என்று சற்று வேதனையுடன் கேட்டுக்கொண்டார்.

படம் திரையரங்குகளில் வெளியாகிபோது படத்தினை பார்த்த பலரும் “புரிதல் இல்லாத நகைச்சுவை மற்றும் மோசமான திரைக்கதை” என்று கடுமையாக விமர்சித்தனர், இதனால் திரையரங்குகளில் படம் தோல்வியடைந்தது. மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, படத்தில் தனது பாடல் (“சிவ ராத்திரி”) அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடர்ந்தது, படத்திற்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில், வனிதாவின் இந்த முடிவு குறித்து பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் இதை “உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு” என்று விமர்சித்துள்ளனர். “வனிதாவின் முயற்சி தைரியமானது, ஆனால் யூடியூப் மெம்பர்ஷிப் மூலம் இவ்வளவு பெரிய கடனை அடைப்பது கடினம்,” என்றும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்