மேடை இடிந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

வணிக வளாக தொடக்க விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயமடைந்தார்.

Priyanka Mohan

தெலுங்கானா :தெலுங்கானா மாநிலம் தோரூரில் நடந்த ஷாப்பிங் மால் திறப்பு விழாவின் போது, திடீரென மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நடிகை பிரியங்கா மோகன் சிக்கி கொண்டார். கஜம் என்கிற வணிக கட்டிட திறப்பு விழாவிற்கு அவர் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அப்பொழுது, நடிகை பிரியங்கா மோகன் உடன் மேடையில் பலர் குவிந்திருந்தனர். திடீரென உடைந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹனுமண்டலா ஜான்சி ரெட்டி, பிரியங்காவுடன் மேடையில் இருந்ததால், அவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தின் வெளிச்சத்தில், நான் நலமாக இருக்கிறேன், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்பினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேடை இடிந்து விழுந்த பிறகு நடிகை பிரியங்கா மோகனை பவுன்சர்கள் குழு கவனமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது.

unknown node

இதற்கிடையில், பிரியங்கா மோகன் கடைசியாக நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் ஜெயம் ரவி உடன் நடித்த பிரதர் படத்தின் வெளிட்டிற்கு காத்திருக்கிறார்.