GOAT படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கேப்டன் விஜயகாந்த்! உருகும் ரசிகர்கள்…
GOAT படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் "மீண்டும் திரையில் கேப்டன்" என எமோஷனலாக தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை : GOAT படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் வைத்து இருப்பதாக படக்குழு கூறி படத்தின் மீதிருந்த, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், அதில் பலரும் காத்திருந்த ஒரு சர்ப்ரைஸ் விஷயம் என்றால் விஜயகாந்த் வரும் காட்சிக்காக தான். ஏனென்றால், விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, விஜய் ரசிகர்களை போலவே, கேப்டன் ரசிகர்களும் கேப்டன் வரும் காட்சி பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். படத்தில் அவருடைய காட்சி வரும்போது தியரங்குகளில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவர் வந்த காட்சிகள் திரையரங்கையே அதிர வைத்தது.
கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்த சமயத்திலேயே, இயக்குனர் வெங்கட் பிரபு GOAT படத்தில் விஜயகாந்தை இப்படி ஒரு காட்சியில் கொண்டு வர திட்டமிட்டுருப்பதாக அனுமதிகேட்டு அவருடைய மகன்களிடம் பேசினார். ஆனால், அதற்கு பிறகு துரதிஷ்டவசமாக விஜயகாந்த் தவறிய காரணத்தால், AI தொழிநுட்பம் பயன்படுத்தி அவரை கொண்டு வந்து, அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலியை தெரிவிக்க முடிவு செய்தனர்.
படத்தில் அவர் வரும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் ரசிகர்கள் அவருடைய காட்சிகளை கொண்டாடினாலும் மற்றோரு பக்கம் அவர் இப்போது உலகத்தில் இல்லாததை நினைத்து கலங்கிப்போய் ‘மீண்டும் திரையில் வந்த கேப்டன்’ என சமூக வலைத்தளங்களில் எமோஷனலாக பதிவிட்டு வருகிறார்கள்.