அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? – ரசிகர் மன்றம் கொடுத்த விளக்கம்!

சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம் என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

suriya

சென்னை :சூர்யா அகரம் மூலம் பல உதவிகளை செய்து கொடுத்து வரும் நிலையில், சமீப நாட்களாக அவர் அரசியல் களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டு இது முற்றிலும் வதந்தியாக பரவும் ஒரு தகவல் என விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஊடக நண்பகர்களுக்கும். சமூக வலைத்தள நண்பர்கள் சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

கலை உலகப் பயணமும். அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்” எனவும் தெரிவிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

unknown node