சென்னை :தமிழக அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இவ்விருதுகள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் 1968 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது 2021-2023 ஆண்டுகளுக்கான விருதுகள் ஒருங்கே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம்பிரபு, பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கு 2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், சாண்டி மாஸ்டர் ஆகியோருக்கு 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு விருது பெறுவோர் (திரைத் துறை):
எஸ்.ஜே. சூர்யா (நடிகர், இயக்குநர்)
சாய் பல்லவி (நடிகை)
லிங்குசாமி (இயக்குநர்)
சூப்பர் சுப்பராயன் (சண்டை பயிற்சியாளர்)
2022 ஆம் ஆண்டு விருது பெறுவோர் (திரைத் துறை):
விக்ரம் பிரபு (நடிகர்)
ஜெயா குகநாதன் (நடிகை)
விவேகா (பாடலாசிரியர்)
டைமண்ட் பாபு (திரைப்பட செய்தித் தொடர்பாளர்)
டி. லட்சுமிகாந்தன் (திரைப்பட புகைப்படக் கலைஞர்)
2023 ஆம் ஆண்டு விருது பெறுவோர் (பகுதி பட்டியல்):
அனிருத் (இசையமைப்பாளர்)
மணிகண்டன் (நடிகர்/இயக்குநர்)
சின்னத்திரை: கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி, என்.பி. உமாசங்கர்பாபு (நிகழ்ச்சித் தொகுப்பாளர்) உள்ளிட்டோர்.
