வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார்...!வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சி ....!நடிகை வனிதா

வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய குமார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நடிகை மஞ்சுளாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயகுமாரும் நடிகை பிரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் வனிதா மீது விஜயக்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதில் மதுரவாயல் அருகே ஆலாபக்கத்தில் உள்ள தனது வீட்டை வனிதாவுக்கு வாடகைக்கு  விட்டதாகவும், ஆனால் தற்போது அவரது வீடு என்று கூறி வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக வனிதா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை .காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன். வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார். வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார்.மேலும் “நான் தயாரிக்கும் “டாடி” என்ற படத்திற்கு எனது தந்தை விஜயகுமார் இடையூறு செய்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 4 படங்களில் மட்டுமே நடித்தவர் பின் சினிமாவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.