புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்... காஜல், விவேக், த்ரிஷா....

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது என அனைத்து கதைகளும் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

unknown node

கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா வந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இடையில் தயாரிப்பு தரப்பிற்கும், இயக்குனர் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு படம் டிராப் என்கிற நிலைமை வந்துவிட்டது.

unknown node

தற்போது பிரச்சனை தீர்ந்து, டிசம்பர் கடைசி அல்லது ஜனவரியில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

ஆனால் தற்போது புது பிரச்சனை உருவாகியுள்ளது. அதாவது, படத்தில் கமிட் செய்யப்பட்ட நடிகர்கள் கால்ஷீட் மற்ற பிரச்சனைகள். அதில் குறிப்பாக மறைந்த நடிகர் விவேக் இந்த படத்தில் போலீசாக நடித்து இருந்தார். தற்போது அவருக்கு பதில் இன்னோர் நடிகரை நடிக்க வைக்க வேண்டும். அதே போல, காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

அதனால், காஜலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்க படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதுதான் தற்போது வரை கிடைத்த தகவல். இன்னும் எந்த நடிகர் மாற்றப்படுகிறார் என வேறு அப்டேட் வருகிறதா என்கிறதை பொறுத்திருந்து பார்க்கலாம்.