அனிருத் - காவ்யா மாறன் திருமணம் ரஜினி கையிலா? வெளியான சீக்ரெட் தகவல்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

Hero Image

சென்னை : சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஒன்று தீ போல பரவிக்கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்கள் தான் .

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டில் பிரம்மாண்டமாக “Destination Wedding” நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.

சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, ஐரோப்பாவில் உள்ள ஒரு தனியார் தீவில் மிக நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மற்றோரு தகவலும் கசிந்து வருகிறது. அதாவது, அனிருத் தரப்பில் விசாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, “திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது உண்மைதான் என்பது போலவும், ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் முழுமையாக சரியானவை அல்ல” என தெரிவிக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், இந்த திருமண பேச்சுவார்த்தையில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் குடும்பத்திற்கும், கலாநிதி மாறன் குடும்பத்திற்கும் ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர் என்பதால், இரு குடும்பங்களுக்கிடையிலான சம்பிரதாய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர் 2” படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால், படம் தொடர்பான பணிகள் முடிந்த பிறகு இந்த திருமண பேச்சுகள் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், காவியா மாறன் நீண்ட காலமாக திருமணம் குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்ததாகவும், அனிருத்துடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பிற்குப் பிறகே குடும்பத்தினர் திருமணம் குறித்து பேச தொடங்கியுள்ளதாகவும் சினிமா கிசுகிசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அனிருத் அல்லது காவியா மாறன் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.