ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
unknown nodeஇந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் இளம் நடிகையாக வளர்ந்து வரும் பிரியங்கா அருள் மோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
unknown nodeஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.