இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படம் “புஷ்பா 2”. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக உருவாகி வருகிறது.
unknown nodePushpa 2 [Image Source: Twitter ]
இந்நிலையில், முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு காட்சிகளையும் படக்குழு பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்களாம்.
இதையும் படியுங்களேன்-கவர்ச்சிக்காக மட்டுமே எடுக்கப்பட்ட அந்தமாதிரி படங்கள்.. இந்த ஜில் லிஸ்டில் அவரின் படமும் இருக்கிறதே…
unknown nodePushpa 2 Rashmika [Image Source: Google]
மேலும். இந்த புஷ்பா 2 திரைப்படத்தை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்தந்த மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம். எனவே புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் 20 மொழிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodePushpa 2 [Image Source: Twitter ]
புஷ்பா 2 படத்தின் டீசரை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாராம். மேலும். முதல் பாகம் வரும் 8-ம் தேதி ரஷ்யாவில் வெளியாக உள்ள நிலையில், 2ம் பாகத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.