தனுஷுக்கு போட்டியாக ஹிட் கொடுக்க சிம்பு போட்ட மாஸ்டர் பிளான்?

STR -48  : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை

raayan str

STR -48  :நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48  படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.

படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, சிம்பு ரசிகர்கள் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயம் என்னவென்றால் STR -48  படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தான். ஆனால், படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

unknown node

str 48 [file image]ஏனென்றால், சிம்பு தேசிங்கு பேசிய சாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தினை 50-வது படமாக மாற்றிவிட்டாராம். அதாவது அவர் தற்போது நடித்து முடித்துள்ள தக் லைஃப் படம் அவருக்கு 48-வது படமாகவும் அடுத்ததாக 49-வது படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தினை 2018-படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான ஜூட் அந்தனி ஜோசப் என்பவர் இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தை முடித்த பிறகு 50-வது படமாக தான் தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். படம் மிகவும் பெரிய பட்ஜெட் படம் என்ற காரணத்தால் அது 50-வது படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என சிம்பு திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

unknown node

dhanush and str [file image]இது ஒரு புறம் இருக்க சினிமா என்றாலே போட்டி இருப்பது வழக்கமானது தான். ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி – கமல், அஜித் -விஜய், வரிசையில் சிம்பு- தனுஷ் என்ற போட்டி தான் இருந்து வருகிறது. தனுஷ் அவருடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி ஹிட் கொடுத்துள்ள நிலையில், சிம்புவும் அவருக்கு போட்டியாக ஹிட் கொடுக்க தான் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.