காதலருடன் புத்தாண்டை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்..!

Actress Nayantara has posted some photo on her Twitter page celebrating the New Year with her boyfriend Vignesh Sivan.

நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி தனது ட்வீட்டர் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று புத்தாண்டை அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி வருகிறார். இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அருமை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உங்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

unknown node