நயன்தாரா, பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து The Lip Balm Company எனும் அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் எனும் உயரம் தொட்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என சுழன்று நடித்து கொண்டிருந்தவர். தற்போது ஷாருக்கான் – அட்லீ இணைந்துள்ள லயன் எனும் ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
unknown nodeஇவர், நடிப்பது மட்டுமல்லாது, இவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரௌடி பிக்ச்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டார்.
unknown nodeஏற்கனவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் சென்னையை சேர்ந்த சாய் வாலே (Chai Waale) எனும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கின்றனர். தற்போது புதிய துறையில் காலதித்துள்ளார் நயன்தாரா.
unknown nodeபிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கம்பெனிக்கு The Lip Balm Company என பெயரிடப்பட்டுள்ளது. நடிப்பை தாண்டி, தயாரிப்பு மற்ற பிசினஸ் என கால் பதித்து வரும் நம் லேடி சூப்பர் ஸ்டாருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.